ஹதீஸ்கள்
#2200
ஸஹீஹ் முஸ்லிம் - Prayer - Funerals
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களைக் கடந்து) ஜனாஸா (பிரேதம்) ஒன்று கொண்டுசெல்லப்பட்டது. அது குறித்து நல்ல விதமாகப் (புகழ்ந்து) பேசப்பட்டது. இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் "உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது" என்று கூறினார்கள். பின்னர் மற்றொரு பிரேதம் கொண்டுசெல்லப்பட்டது. அது குறித்து இகழ்வாகப் பேசப்பட்டது. அப்போதும் நபி (ஸல்) அவர்கள் "உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது" என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் "(அல்லாஹ்வின் தூதரே!) என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்ட போது அது குறித்து நல்லவிதமாகப் பேசப்பட்டது. அதற்கு நீங்கள் "உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது;" என்று கூறினீர்கள். பிறகு மற்றொரு பிரேதம் கொண்டுசெல்லப்பட்டது. அது குறித்து இகழ்வாகப் பேசப்பட்டது. அதற்கும் நீங்கள் "உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது;" என்று கூறினீர்கள். (இரண்டிற்குமே இவ்வாறு தாங்கள் கூறக் காரணமென்ன?)" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் யாரைப் பற்றி நல்ல விதமாகப் பேசினீர்களோ அவருக்குச் சொர்க்கம் உறுதியாகிவிட்டது; நீங்கள் யாரைப் பற்றி இகழ்வாகப் பேசினீர்களோ அவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவீர்கள்; நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவீர்கள்;நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவீர்கள்" என்று (மும்முறை) கூறினார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "நபி (ஸல்) அவர்கள் இருந்த இடத்தின் வழியாக பிரேதம் ஒன்று கொண்டு செல்லப்பட்டது" என்று ஹதீஸ் தொடங்குகிறது. இதர விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், மேற்கண்ட ஹதீஸே முழுமையானதாகும். அத்தியாயம் :
وحدثنا يحيى بن ايوب، وابو بكر بن ابي شيبة وزهير بن حرب وعلي بن حجر السعدي كلهم عن ابن علية، - واللفظ ليحيى قال حدثنا ابن علية، - اخبرنا عبد العزيز، بن صهيب عن انس بن مالك، قال مر بجنازة فاثني عليها خير فقال نبي الله صلى الله عليه وسلم " وجبت وجبت وجبت " . ومر بجنازة فاثني عليها شر فقال نبي الله صلى الله عليه وسلم " وجبت وجبت وجبت " . قال عمر فدى لك ابي وامي مر بجنازة فاثني عليها خيرا فقلت وجبت وجبت وجبت . ومر بجنازة فاثني عليها شر فقلت وجبت وجبت وجبت فقال رسول الله صلى الله عليه وسلم " من اثنيتم عليه خيرا وجبت له الجنة ومن اثنيتم عليه شرا وجبت له النار انتم شهداء الله في الارض انتم شهداء الله في الارض انتم شهداء الله في الارض
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayer - Funerals
- Hadith Index
- #2200
- Book Index
- 78
Grades
- -
