ஹதீஸ்கள்
#2060
ஸஹீஹ் முஸ்லிம் - Prayer - Two Eids
உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அபூவாக்கித் அவ்ஃப் பின் அல்ஹாரிஸ் அல் லைஸீ (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் நோன்புப் பெருநாள் (தொழுகை)களில் எ(ந்த அத்தியாயத்)தை ஓதுவார்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அபூவாக்கித் (ரலி) அவர்கள் "காஃப் வல்குர்ஆனில் மஜீத்" எனும் (50ஆவது) அத்தியாத்தையும் "இக்தரபத்திஸ் ஸாஅத்து வன்ஷக்கல் கமர்" எனும் (54ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள் என்று விடையளித்தார்கள். அத்தியாயம் :
وحدثنا اسحاق بن ابراهيم، اخبرنا ابو عامر العقدي، حدثنا فليح، عن ضمرة، بن سعيد عن عبيد الله بن عبد الله بن عتبة، عن ابي واقد الليثي، قال سالني عمر بن الخطاب عما قرا به رسول الله صلى الله عليه وسلم في يوم العيد فقلت ب { اقتربت الساعة} و { ق والقران المجيد}
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayer - Two Eids
- Hadith Index
- #2060
- Book Index
- 15
Grades
- -
