ஹதீஸ்கள்
#2026
ஸஹீஹ் முஸ்லிம் - Prayer - Friday
உபைதுல்லாஹ் பின் அபீராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்களை மதீனாவின் ஆளுநராக நியமித்துவிட்டு மர்வான் பின் ஹகம் மக்காவிற்குச் சென்றார். (இந்தக் காலகட்டத்தில்) அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு ஜுமுஆத் தொழுகை நடத்தினார்கள். அதில் ‘அல்ஜுமுஆ" எனும் (62ஆவது) அத்தியாயத்தை (முதல் ரக்அத்தில்) ஓதினார்கள். பிறகு இரண்டாவது ரக்அத்தில் "இதா ஜாஅக்கல் முனாஃபிக்கூன்" (என்று தொடங்கும் 63ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். தொழுகை முடிந்ததும் அபூ ஹுரைரா (ரலி) அவர்களைச் சந்தித்து, "நீங்கள் இரண்டு அத்தியாயங்களை ஓதினீர்கள். இவ்விரு அத்தியாயங்களும் அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் கூஃபாவில் இருந்த போது ஓதிவந்தவை" என்றேன். அதற்கு அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் இவ்விரு அத்தியாயங்களையும் ஓத நான் கேட்டுள்ளேன்" என்று விடையளித்தார்கள். - மேற்கண்ட ஹதீஸ் உபைதுல்லாஹ் பின் அபீராஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ஹா(த்)திம் பின் இஸ்மாயீல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "முதல் ரக்அத்தில் ‘அல்ஜுமுஆ" அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் ‘இதா ஜாஅக்கல் முனாஃபிக்கூன்" அத்தியாயத்தையும் ஓதினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் பின் உபைத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் முந்தைய ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة بن قعنب، حدثنا سليمان، - وهو ابن بلال - عن جعفر، عن ابيه، عن ابن ابي رافع، قال استخلف مروان ابا هريرة على المدينة وخرج الى مكة فصلى لنا ابو هريرة الجمعة فقرا بعد سورة الجمعة في الركعة الاخرة { اذا جاءك المنافقون} - قال - فادركت ابا هريرة حين انصرف فقلت له انك قرات بسورتين كان علي بن ابي طالب يقرا بهما بالكوفة . فقال ابو هريرة اني سمعت رسول الله صلى الله عليه وسلم يقرا بهما يوم الجمعة
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayer - Friday
- Hadith Index
- #2026
- Book Index
- 76
Grades
- -
