ஹதீஸ்கள்
#1718
ஸஹீஹ் முஸ்லிம் - Introduction
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ("அல்அத்தமா" என மக்கள் அழைக்கும்) இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து ஃபஜ்ர் வரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள்; ஒவ்வோர் இரண்டு ரக்அத்களுக்கும் இடையில் சலாம் கொடுப்பார்கள்; ஒரு ரக்அத் வித்ர் தொழுவார்கள். தொழுகை அறிவிப்பாளர் ஃபஜ்ர் தொழுகைக்கு அறிவிப்புச் செய்து முடித்து,வைகறை வெளிச்சம் பளிச்சிட்டிருக்க, (தம்மைத் தொழுகைக்கு அழைப்பதற்காக) அறிவிப்பாளர் வரும் போது எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்; பிறகு ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றுவதற்காக (தம்மை அழைக்க) அறிவிப்பாளர் வரும்வரை வலப் பக்கத்தின் மீது சாய்ந்து படுத்திருப்பார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஹர்மலா (ரஹ்) அவர்களது அந்த அறிவிப்பில் "வைகறை வெளிச்சம் பளிச்சிட்டிருக்க, அறிவிப்பாளர் வரும்போது" என்பதும், "தொழுகையை நிறைவேற்றுவதற்காக" எனும் குறிப்பும் இடம்பெறவில்லை. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன. அத்தியாயம் :
وحدثني حرملة بن يحيى، حدثنا ابن وهب، اخبرني عمرو بن الحارث، عن ابن شهاب، عن عروة بن الزبير، عن عايشة، زوج النبي صلى الله عليه وسلم قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي فيما بين ان يفرغ من صلاة العشاء - وهي التي يدعو الناس العتمة - الى الفجر احدى عشرة ركعة يسلم بين كل ركعتين ويوتر بواحدة فاذا سكت الموذن من صلاة الفجر وتبين له الفجر وجاءه الموذن قام فركع ركعتين خفيفتين ثم اضطجع على شقه الايمن حتى ياتيه الموذن للاقامة . وحدثنيه حرملة، اخبرنا ابن وهب، اخبرني يونس، عن ابن شهاب، بهذا الاسناد . وساق حرملة الحديث بمثله غير انه لم يذكر وتبين له الفجر وجاءه الموذن . ولم يذكر الاقامة . وساير الحديث بمثل حديث عمرو سواء
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Introduction
- Hadith Index
- #1718
- Book Index
- 0
Grades
- -
