ஹதீஸ்கள்
#1382
ஸஹீஹ் முஸ்லிம் - Mosques and Places of Prayer
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனது அறையிலிருந்து சூரிய ஒளி (முற்றாக) அகலாத நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: சூரிய ஒளி எனது அறைக்குள் விழுந்து கொண்டும் நிழல் இன்னும் (கிழக்குப்புறச் சுவரில்) விழாமலும் உள்ள நிலையில் நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுவார்கள். அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நிழல் இன்னும் (கிழக்குப் புறச் சுவரில்) தெரியாத நிலையில்" என்று இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو بكر بن ابي شيبة، وعمرو الناقد، قال عمرو حدثنا سفيان، عن الزهري، عن عروة، عن عايشة، كان النبي صلى الله عليه وسلم يصلي العصر والشمس طالعة في حجرتي لم يفي الفىء بعد . وقال ابو بكر لم يظهر الفىء بعد
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Mosques and Places of Prayer
- Hadith Index
- #1382
- Book Index
- 216
Grades
- -
