ஹதீஸ்கள்
#1089
ஸஹீஹ் முஸ்லிம் - Prayers
இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், நீங்கள் ருகூஉவில் என்ன ஓதுவீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், சுப்ஹானக்க வபி ஹம்திக்க லாயிலாஹ இல்லா அன்த்த (இறைவா! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். உன்னைத் தவிர வேறு இறைவனில்லை) என்று ஓதுகிறேன். ஏனெனில், இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்தார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் ஒருநாள் இரவில் நபி (ஸல்) அவர்களைக் காணாமல் தேடினேன். அவர்கள் தம் மற்றத் துணைவியரில் எவரிடமாவது சென்றிருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டே அவர்களைத் தேடிப் போனேன். (அவர்களை எங்கும் காணாமல்) பின்னர் திரும்பிவந்தேன். அப்போது அவர்கள் (தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள்) ருகூஉவில் அல்லது சஜ்தாவில் சுப்ஹானக்க வபி ஹம்திக்க லாயிலாஹ இல்லா அன்த்த (இறைவா! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். உன்னைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறிக்கொண்டிருந்தார்கள். அப்போது நான், என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் ஓர் எண்ணத்தில் இருந்தேன். ஆனால், நீங்கள் மற்றோர் எண்ணத்தில் இருக்கிறீர்கள் என்று கூறினேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
وحدثني حسن بن علي الحلواني، ومحمد بن رافع، قالا حدثنا عبد الرزاق، اخبرنا ابن جريج، قال قلت لعطاء كيف تقول انت في الركوع قال اما سبحانك وبحمدك لا اله الا انت فاخبرني ابن ابي مليكة عن عايشة قالت افتقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة فظننت انه ذهب الى بعض نسايه فتحسست ثم رجعت فاذا هو راكع او ساجد يقول " سبحانك وبحمدك لا اله الا انت " . فقلت بابي انت وامي اني لفي شان وانك لفي اخر
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayers
- Hadith Index
- #1089
- Book Index
- 251
Grades
- -
