ஹதீஸ்கள்
#7532
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! உயர்ந்தோன் அல்லாஹ் விடம் மிகப் பெரிய பாவம் எது?” என்று ஒருவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைகற்பித்து வழிபடுவ தாகும்” என்று பதிலளித்தார்கள். அவர், “பிறகு எது?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “பிறகு உன் குழந்தை உன்னுடன் உணவு உண்பதை அஞ்சி அதை நீ கொன்றுவிடுவதாகும்” என்று பதிலளித்தார்கள். அவர், “பிறகு எது?” என்று கேட்க, நபியவர்கள் “உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும்” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் இந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் அல்லாஹ், “அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைக்கமாட்டார்கள். அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்யமாட்டார்கள்; விபசாரம் செய்யமாட்டார்கள். யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அதற்குரிய தண்டனையைப் பெற்றே தீருவார். மறுமை நாளில் அவருக்கு இரட்டிப்பு வேதனை அளிக்கப்படும்” எனும் வசனத்தை (25:68) அருளினான்.171 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا جرير، عن الاعمش، عن ابي وايل، عن عمرو بن شرحبيل، قال قال عبد الله قال رجل يا رسول الله اى الذنب اكبر عند الله قال " ان تدعو لله ندا، وهو خلقك ". قال ثم اى قال " ثم ان تقتل ولدك، ان يطعم معك ". قال ثم اى قال " ان تزاني حليلة جارك ". فانزل الله تصديقها {والذين لا يدعون مع الله الها اخر ولا يقتلون النفس التي حرم الله الا بالحق ولا يزنون ومن يفعل ذلك} الاية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7532
- Book Index
- 157
Grades
- -
