ஹதீஸ்கள்
#7467
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்து (உரையாற்றியபோது) சொன்னார்கள்: உங்களுக்குமுன் சென்ற சமுதாயத்தாருடன் நீங்கள் வாழும் காலத்தை ஒப்பிடும்போது நீங்கள் (இவ்வுலகில்) வாழ்வது அஸ்ர் தொழுகைக்கும் சூரியன் மறைவதற்கும் இடையிலான (குறுகிய) கால அளவேயாகும். ‘தவ்ராத்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பட்டது. அவர்கள் (காலை முதல்) நண்பகல்வரை அதன்படி செயல்பட்டார்கள்; பின்னர் சக்தி இழந்து விட்டார்கள். (கூலியாக) ஒவ்வொரு வருக்கும் ஒரு ‘கீராத்’ வழங்கப்பெற்றது. பின்னர் ‘இன்ஜீல்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் (நண்பகல் முதல்) அஸ்ர் தொழுகைவரை அதன்படி செயல்பட்டுவிட்டுப் பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். (கூலியாக) அவர்களுக்கும் ஒவ்வொரு ‘கீராத்’ வழங்கப்பெற்றது. பிறகு உங்களுக்கு குர்ஆன் வழங்கப்பெற்றது. நீங்கள் (அஸ்ர் முதல்) சூரியன் மறையும்வரை அதன்படி செயல்புரிந்தீர்கள். உங்களுக்கு இரண்டிரண்டு கீராத்கள் (கூலியாக) வழங்கப்பட்டன. (அப்போது) ‘தவ்ராத்’ வேதக்காரர்கள் “எங்கள் இறைவா! இவர்கள் வேலை செய்ததோ குறைந்த நேரம். கூலியோ அதிகம்!” என்று சொன்னார்கள். அல்லாஹ், “நான் உங்களுக்குரிய கூலியில் சிறிதேனும் (குறைத்து) அநீதியிழைத்தேனா?” என்று கேட்க, அவர்கள் ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். அல்லாஹ் “அ(வ்வாறு முஸ்லிம்களுக்கு அதிகமாகக் கொடுத்த)து என் அருளாகும். நான் நாடியவர்களுக்கு அதைத் தருகிறேன்” என்று சொன்னான்.109 அத்தியாயம் :
حدثنا الحكم بن نافع، اخبرنا شعيب، عن الزهري، اخبرني سالم بن عبد الله، ان عبد الله بن عمر رضى الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم وهو قايم على المنبر " انما بقاوكم فيما سلف قبلكم من الامم، كما بين صلاة العصر الى غروب الشمس، اعطي اهل التوراة التوراة، فعملوا بها حتى انتصف النهار، ثم عجزوا، فاعطوا قيراطا قيراطا، ثم اعطي اهل الانجيل الانجيل، فعملوا به حتى صلاة العصر، ثم عجزوا، فاعطوا قيراطا قيراطا، ثم اعطيتم القران فعملتم به حتى غروب الشمس، فاعطيتم قيراطين قيراطين، قال اهل التوراة ربنا هولاء اقل عملا واكثر اجرا. قال هل ظلمتكم من اجركم من شىء قالوا لا. فقال فذلك فضلي اوتيه من اشاء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7467
- Book Index
- 93
Grades
- -
