ஹதீஸ்கள்
#7462
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவில் உள்ள ஒரு வேளாண் பூமியில் (பேரீச்சந் தோட்டத்தில்) நடந்து சென்றுகொண்டிருந்தபோது யூதர்கள் சிலரை நாங்கள் கடந்துசென்றோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் பேரீச்சமட்டை ஒன்றை ஊன்றியபடி வந்துகொண்டிருந்தார்கள். அப்போது யூதர்களில் ஒருவர் மற்றொருவரிடம் “அவரிடம் உயிர் (ரூஹ்) பற்றிக் கேளுங்கள்” என்று சொன்னார். அதற்கு மற்றவர் “அவரிடம் கேட்காதீர்கள்; இது தொடர்பாக நீங்கள் விரும்பாத பதிலை அவர் தந்துவிடக்கூடும்” என்று சொல்ல, மற்றவர்கள் “நாம் அவரிடம் நிச்சயம் கேட்போம்” என்று சொன்னார்கள். அப்போது அவர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் எழுந்து (வந்து), “அபுல் காசிமே! உயிர் (ரூஹ்) என்பதென்ன?” என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அவருக்குப் பதில் எதுவும் சொல்லாமல்) மௌனமாக இருந்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறுகின்றது என்று அறிந்துகொண்டேன். “(நபியே!) உம்மிடம் அவர்கள் உயிர் பற்றிக் கேட்கின்றார்கள். உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது. அவர்களுக்குச் சிறிதளவு அறிவே வழங்கப்பட்டுள்ளது” எனும் (17:85ஆவது) இறைவசனத்தை எடுத்துரைத்தார்கள்.102 அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ் (ரஹ்) கூறுகிறார்கள்: (‘உங்களுக்கு’ சிறிதளவு ஞானமே வழங்கப்பட்டுள்ளது என்பதற்குப் பதிலாக) ‘அவர்களுக்கு’ என்றுதான் எங்களது ஓதலில் உள்ளது. அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، عن عبد الواحد، عن الاعمش، عن ابراهيم، عن علقمة، عن ابن مسعود، قال بينا انا امشي، مع النبي صلى الله عليه وسلم في بعض حرث المدينة وهو يتوكا على عسيب معه، فمررنا على نفر من اليهود فقال بعضهم لبعض سلوه عن الروح. فقال بعضهم لا تسالوه ان يجيء فيه بشىء تكرهونه. فقال بعضهم لنسالنه. فقام اليه رجل منهم فقال يا ابا القاسم ما الروح فسكت عنه النبي صلى الله عليه وسلم فعلمت انه يوحى اليه فقال {ويسالونك عن الروح قل الروح من امر ربي وما اوتوا من العلم الا قليلا}. قال الاعمش هكذا في قراءتنا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7462
- Book Index
- 88
Grades
- -
