ஹதீஸ்கள்
#7456
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மதீனாவிலுள்ள ஒரு வேளாண் பூமியில் (பேரீச்சந் தோப்பில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்து (போய்க்)கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் பேரீச்சமட்டை ஒன்றை ஊன்றியவாறு யூதர்கள் சிலரைக் கடந்துசென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றொருவரிடம், (நபியவர்களைச் சுட்டிக்காட்டி,) “இவரிடம் ‘உயிர்’ (ரூஹ்) பற்றிக் கேளுங்கள்!” என்றார். இன்னொருவர், “இவரிடம் கேட்காதீர்கள்! (நாம் விரும்பாத பதிலை அவர் சொல்லிவிடலாம்)” என்றார். பின்னர் அவர்கள் (அனைவரும் சேர்ந்து) நபி (ஸல்) அவர்களிடம் ‘ரூஹ்’ பற்றிக் கேட்டனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் பேரீச்சமட்டையை ஊன்றியவர்களாக எழுந்தார்கள். அப்போது அவர்களுக்குப் பின்னாலிருந்த நான், நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) வருகிறது என அறிந்துகொண்டேன். பிறகு அவர்கள், “(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். கூறுக: உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது. உங்களுக்குச் சிறிதளவு அறிவே கொடுக்கப்பட்டுள்ளது” எனும் (17:85ஆவது) வசனத்தைக் கூறினார்கள். அப்போது அந்த யூதர்கள் ஒருவர் மற்றவரிடம் “அவரிடம் கேட்க வேண்டாமென உங்களிடம் முன்பே கூறினோமே!” என்றார்கள்.96 அத்தியாயம் :
حدثنا يحيى، حدثنا وكيع، عن الاعمش، عن ابراهيم، عن علقمة، عن عبد الله، قال كنت امشي مع رسول الله صلى الله عليه وسلم في حرث بالمدينة وهو متكي على عسيب، فمر بقوم من اليهود فقال بعضهم لبعض سلوه عن الروح. وقال بعضهم لا تسالوه عن الروح. فسالوه فقام متوكيا على العسيب وانا خلفه، فظننت انه يوحى اليه فقال {ويسالونك عن الروح قل الروح من امر ربي وما اوتيتم من العلم الا قليلا} فقال بعضهم لبعض قد قلنا لكم لا تسالوه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7456
- Book Index
- 82
Grades
- -
