ஹதீஸ்கள்
#7454
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரது கரு தம் தாயின் வயிற்றில் நாற்பது ‘பகல்’ அல்லது ‘இரவு’ சேமிக்கப்படுகிறது. பிறகு அதைப் போன்றே (நாற்பது நாட்கள்) அது (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு அதைப் போன்றே (மேலும் நாற்பது நாட்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப்பிண்டமாக மாறுகிறது. பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படு கின்றன: அவர், (கருவாக இருக்கும்) அந்த மனிதனின் வாழ்வாதாரத்தையும், அவனது வாழ்நாளையும், செயல்பாட்டையும், அவன் (இறுதிக் கட்டத்தில்) நற்பேறற்றவரா; அல்லது நற்பேறுபெற்றவரா என்பதையும் (இறைவனின் கட்டளைப்படி) பதிவு செய்கிறார். பிறகு அவனுள் உயிர் ஊதப்படுகிறது. இதனால்தான், உங்களில் ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்)செயல்களை செய்துகொண்டேயிருப்பார். இறுதியில் சொர்க்கத்திற்கும் அவருக்குமிடையே ஒரு முழம் (இடைவெளி)தான் இருக்கும். அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொள்ள அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து, அதன் விளைவாக நரகம் புகுந்துவிடுவார். (இதைப் போன்றே) உங்களில் ஒருவர் நரகவாசிகளின் செயலை செய்து கொண்டேயிருப்பார். இறுதியில் நரகத்திற்கும் அவருக்குமிடையே ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும். அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொள்ளும். அவர் சொர்க்கத்திற்குரியவர்களின் (நற்)செயல்களைச் செய்து, அதன் விளைவாக சொர்க்கம் புகுவார். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.94 அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، حدثنا الاعمش، سمعت زيد بن وهب، سمعت عبد الله بن مسعود رضى الله عنه حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق " ان خلق احدكم يجمع في بطن امه اربعين يوما واربعين ليلة، ثم يكون علقة مثله، ثم يكون مضغة مثله، ثم يبعث اليه الملك فيوذن باربع كلمات، فيكتب رزقه واجله وعمله وشقي ام سعيد ثم ينفخ فيه الروح، فان احدكم ليعمل بعمل اهل الجنة، حتى لا يكون بينها وبينه الا ذراع، فيسبق عليه الكتاب، فيعمل بعمل اهل النار فيدخل النار، وان احدكم ليعمل بعمل اهل النار، حتى ما يكون بينها وبينه الا ذراع فيسبق عليه الكتاب، فيعمل عمل اهل الجنة فيدخلها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7454
- Book Index
- 80
Grades
- -
