ஹதீஸ்கள்
#7452
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (என் சிறிய தாயாரும் நபியவர்களின் துணைவியாருமான) மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில், இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகை எவ்வாறுள்ளது என்பதைப் பார்ப்பதற்காக (ஒருநாள்) இரவு தங்கினேன். அப்போது மைமூனா அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியாருடன் சிறிது நேரம் பேசிவிட்டுத் தூங்கிவிட்டார்கள். ‘இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி வந்தபோது’ அல்லது அதன் ‘ஒரு பகுதி வந்தபோது’ அவர்கள் (எழுந்து) அமர்ந்துகொண்டு வானத்தை நோக்கியவாறு “நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும், இரவு- பகல் மாறி மாறிவருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன” எனும் (3:190 ஆவது) வசனத்தை ஓதினார்கள். பிறகு எழுந்து அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள்; பல் துலக்கினார்கள். பிறகு, பதினொன்று ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் பிலால் (ரலி) அவர்கள் ஃபஜ்ர் தொழுகைக்கு அழைப்புக்கொடுத்தார்கள். உடனே இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுதுவிட்டுப் புறப்பட்டு பள்ளிவாசலுக்குச் சென்று மக்களுக்கு சுப்ஹ் தொழுவித்தார்கள்.92 அத்தியாயம் :
حدثنا سعيد بن ابي مريم، اخبرنا محمد بن جعفر، اخبرني شريك بن عبد الله بن ابي نمر، عن كريب، عن ابن عباس، قال بت في بيت ميمونة ليلة والنبي صلى الله عليه وسلم عندها لانظر كيف صلاة رسول الله صلى الله عليه وسلم بالليل، فتحدث رسول الله صلى الله عليه وسلم مع اهله ساعة ثم رقد، فلما كان ثلث الليل الاخر او بعضه قعد فنظر الى السماء فقرا {ان في خلق السموات والارض} الى قوله {لاولي الالباب} ثم قام فتوضا واستن، ثم صلى احدى عشرة ركعة، ثم اذن بلال بالصلاة فصلى ركعتين، ثم خرج فصلى للناس الصبح
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7452
- Book Index
- 78
Grades
- -
