ஹதீஸ்கள்
#7432
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள் வார்க்கப்படாத சிறிய தங்கக் கட்டி ஒன்றை யமன் நாட்டிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் அக்ரஉ பின் ஹாபிஸ் அல்ஹன்ழலீ அல்முஜாஷிஈ (ரலி), உயைனா பின் பத்ர் அல்ஃபஸாரீ (ரலி), அல்கமா பின் உலாஸா அல்ஆமிரீ அல்கிலாபீ (ரலி), ஸைத் அல்கைல் அத்தாயீ அந்நப்ஹானீ (ரலி) ஆகிய நால்வரிடையே பங்கிட்டார்கள். இதைக் கண்ட குறைஷியரும் அன்சாரி களும் கோபமடைந்து, “நஜ்த்வாசிகளின் தலைவர்களுக்கு இதைக் கொடுக்கிறார்கள்; நம்மை விட்டுவிடுகிறார்களே” என்று கூறினார்கள். (இதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், “(புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) அவர்களை ஈர்ப்பதற்காகவே இவ்வாறு கொடுத்தேன்” என்று சொன்னார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, நெற்றி புடைத்த, அடர்த்தியான தாடி கொண்ட, கன்னங்கள் உப்பிய, தலை முடி மழிக்கப்பட்டிருந்த ஒரு மனிதர் முன்வந்து, “முஹம்மதே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் அல்லாஹ் வுக்கு மாறு செய்தால் வேறு யார் அவனுக்குக் கீழ்ப்படியப் போகிறார்கள்? பூமியிலிருப்பவர்களில் என்னை அவன் நம்பிக்கைக்குரியவனாக ஆக்கியுள்ளான்; (நான் வானிலிருப்பவர்களின் நம்பிக்கைக்கும் உரியவன்;) ஆனால், நீங்கள் என்னை நம்ப மறுக்கின்றீர்களே?” என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர் அம்மனிதரைக் கொன்றுவிட அனுமதி கேட்டார் -அவர் காலித் பின் அல்வலீத் (ரலி) என்றே நான் கருதுகிறேன்- ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவரைத் தடுத்துவிட்டார்கள். அந்த மனிதர் திரும்பிச் சென்றபோது நபி (ஸல்) அவர்கள், “இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டி (இதயத்திற்குள்) செல்லாது; வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன்மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள். இஸ்லாமியர்களையே அவர்கள் கொலை செய்வார்கள்; சிலை வழிபாட்டாளர்களை விட்டுவிடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் ‘ஆத்’ கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் நான் அழிப்பேன்” என்று சொன்னார்கள்.72 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا قبيصة، حدثنا سفيان، عن ابيه، عن ابن ابي نعم او ابي نعم شك قبيصة عن ابي سعيد، قال بعث الى النبي صلى الله عليه وسلم بذهيبة فقسمها بين اربعة. وحدثني اسحاق بن نصر حدثنا عبد الرزاق اخبرنا سفيان عن ابيه عن ابن ابي نعم عن ابي سعيد الخدري قال بعث علي وهو باليمن الى النبي صلى الله عليه وسلم بذهيبة في تربتها، فقسمها بين الاقرع بن حابس الحنظلي ثم احد بني مجاشع، وبين عيينة بن بدر الفزاري، وبين علقمة بن علاثة العامري ثم احد بني كلاب، وبين زيد الخيل الطايي ثم احد بني نبهان، فتغضبت قريش والانصار فقالوا يعطيه صناديد اهل نجد ويدعنا قال " انما اتالفهم ". فاقبل رجل غاير العينين، ناتي الجبين، كث اللحية، مشرف الوجنتين، محلوق الراس فقال يا محمد اتق الله. فقال النبي صلى الله عليه وسلم " فمن يطيع الله اذا عصيته فيامني على اهل الارض، ولا تامنوني ". فسال رجل من القوم قتله اراه خالد بن الوليد فمنعه النبي صلى الله عليه وسلم فلما ولى قال النبي صلى الله عليه وسلم " ان من ضيضي هذا قوما يقرءون القران لا يجاوز حناجرهم، يمرقون من الاسلام مروق السهم من الرمية، يقتلون اهل الاسلام ويدعون اهل الاوثان، لين ادركتهم لاقتلنهم قتل عاد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7432
- Book Index
- 59
Grades
- -
