ஹதீஸ்கள்
#7424
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்க பள்ளிவாசலினுள் நான் நுழைந்தேன். சூரியன் மறையத் தொடங்கியதும் நபி (ஸல்) அவர்கள், “அபூதர்ரே! இது (சூரியன்) எங்கு செல்கின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று சொன்னேன். அவர்கள், “இது இறைவனுக்கு (அவனது அரியணைக்குக் கீழே) சிரவணக்கம் (சஜ்தா) செய்ய அனுமதி கேட்பதற்காகச் செல்கின்றது. அதற்கு அனுமதி வழங்கப்படும். அதனிடம், “நீ எங்கிருந்து வந்தாயோ அந்த இடத்திற்கே திரும்பிச் செல்” என்று சொல்லப்பட்டுவிட்டதைப் போன்று இருக்கும். உடனே அது மறைந்த இடத்திலிருந்து (இறுதிநாளில்) உதயமாகும்” என்று சொல்லிவிட்டு, “அதுதான் அது நிலைகொள்ளும் இடமாகும்” (தாலிக்க முஸ்த்தகர்ருல் லஹா) என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களது ஓதல் முறைப்படி (36:38ஆவது வசனத்தை) ஓதினார்கள்.62 அத்தியாயம் :
حدثنا يحيى بن جعفر، حدثنا ابو معاوية، عن الاعمش، عن ابراهيم هو التيمي عن ابيه، عن ابي ذر، قال دخلت المسجد ورسول الله صلى الله عليه وسلم جالس، فلما غربت الشمس قال " يا ابا ذر هل تدري اين تذهب هذه ". قال قلت الله ورسوله اعلم. قال " فانها تذهب تستاذن في السجود فيوذن لها، وكانها قد قيل لها ارجعي من حيث جيت. فتطلع من مغربها ". ثم قرا {ذلك مستقر لها} في قراءة عبد الله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7424
- Book Index
- 52
Grades
- -
