ஹதீஸ்கள்
#7420
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் தம் மனைவியின் (ஸைனப்) போக்கு குறித்து (நபி (ஸல்) அவர்களிடம்) முறையிட வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள்; உன் மனைவியை (மணவிலக்குச் செய்துவிடாமல்) மணபந்தத்தில் நீடிக்கச்செய்” என்று கூறலானார்கள். நபி (ஸல்) அவர்கள் (தம் வாழ்நாளில் குர்ஆன் வசனங்களில்) எதையேனும் மறைப்பவர்களாக இருந்திருந்தால் (பின்வரும் 33:37ஆவது வசனமான) இதைத்தான் மறைத்திருப்பார்கள். இதன் காரணத்தால் ஸைனப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய மற்றத் துணைவியர் முன்பாக (தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப்) பெருமை பாராட்டிக்கொள்வார்கள். “உங்களை (நபி (ஸல்) அவர்களுக்கு) உங்கள் வீட்டார் மணமுடித்துத் தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழு வானங்களுக்கு மேலிருந்து (நபி (ஸல்) அவர்களுக்கு) மணமுடித்துக்கொடுத்தான்” என்று சொல்வார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “(நபியே!) நீர் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உமது உள்ளத்தில் மறைத்து வைத்துக்கொண்டீர்” எனும் (33:37ஆவது) இறைவசனம், (தம்பதியராயிருந்த) ஸைனப் (ரலி) அவர்களுக்கும் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களுக்குமிடையே நடந்த பிரச்சினையில் (நபி (ஸல்) அவர்கள் கருத்து தெரிவித்தபோது)தான் அருளப்பெற்றது” என்று அனஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.59 அத்தியாயம் :
حدثنا احمد، حدثنا محمد بن ابي بكر المقدمي، حدثنا حماد بن زيد، عن ثابت، عن انس، قال جاء زيد بن حارثة يشكو فجعل النبي صلى الله عليه وسلم يقول " اتق الله، وامسك عليك زوجك ". قالت عايشة لو كان رسول الله صلى الله عليه وسلم كاتما شييا لكتم هذه. قال فكانت زينب تفخر على ازواج النبي صلى الله عليه وسلم تقول زوجكن اهاليكن، وزوجني الله تعالى من فوق سبع سموات. وعن ثابت {وتخفي في نفسك ما الله مبديه وتخشى الناس} نزلت في شان زينب وزيد بن حارثة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7420
- Book Index
- 48
Grades
- -
