ஹதீஸ்கள்
#7419
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் வலக் கரம் நிரம்பி யுள்ளது. வாரி வழங்குவதால் அது வற்றிவிடுவதில்லை. அது இரவிலும் பகலிலும் (அருள் மழையைப்) பொழிந்து கொண்டேயிருக்கிறது. அவன் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த (நேரத்)திலிருந்து (இப்போதுவரை) அவன் வாரி வழங்கியது எவ்வளவு இருக்கும் சொல் லுங்கள். அதுவும்கூட அவனது வலக் கரத்தில் இருப்பதைக் குறைத்துவிடவில்லை. (வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தபோது) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மீதிருந்தது. அவனது மற்றொரு கரத்தில் ‘கொடைப் பொழிவு’ அல்லது ‘கொடைக் குறைவு’ உள்ளது. (அதன் வாயிலாக) அவன் (சிலரை) உயர்த்துகின்றான்; (சிலரைத்) தாழ்த்துகின்றான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.58 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن همام، حدثنا ابو هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " ان يمين الله ملاى لا يغيضها نفقة سحاء الليل والنهار، ارايتم ما انفق منذ خلق السموات والارض فانه لم ينقص ما في يمينه، وعرشه على الماء وبيده الاخرى الفيض او القبض يرفع ويخفض
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7419
- Book Index
- 47
Grades
- -
