ஹதீஸ்கள்
#7418
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்தேன். அப்போது பனூ தமீம் குலத் தாரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். (அவர்களிடம்) நபி (ஸல்) அவர்கள், “நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே!” என்று சொன்னார் கள். அதற்கு அவர்கள், “எங்களுக்கு நற்செய்தி சொன்னீர்கள். (அது இருக்கட் டும்! தர்மம்) கொடுங்கள்” என்று கூறினார்கள். அப்போது யமன் நாட்டு மக்கள் சிலர் (அஷ்அரீ குலத்தார்) வந்தனர். நபி (ஸல்) அவர்கள், “யமன் வாசிகளே! நீங்கள் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்கவில்லை” என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள், “நாங்கள் (அதை) ஏற்றுக்கொண்டோம்; மார்க்கக் கல்வி கற்பதற்காகவும், இந்த உலகம் உண்டான தன் ஆரம்ப நிலை குறித்துத் தங்களிடம் கேட்பதற்காகவுமே நாங்கள் தங்களிடம் வந்தோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “(ஆதியில்) அல்லாஹ் மட்டுமே இருந்தான்; அவனுக்கு முன் (அவனைத் தவிர வேறு) எந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மீது இருந்தது. பின்னர் வானங்கள் மற்றும் பூமியை அவன் படைத்தான். (லவ்ஹுல் மஹ்ஃபூழ் எனும்) பாதுகாக்கப்பெற்ற பலகையில் (பேரண்டத்தின்) எல்லா விஷயங்களையும் எழுதினான்” என்று சொன்னார்கள். (அறிவிப்பாளர் கூறுகிறார்:) பின்னர் ஒருவர் என்னிடம் வந்து, “இம்ரானே! உங்கள் ஒட்டகத்தை (கண்டு) பிடியுங்கள்; அது (ஓடிப்) போய்விட்டது” என்று கூற, நான் அதைத் தேட (எழுந்து) சென்றுவிட்டேன். சென்று பார்த்தால் ஒட்டகத்தைக் காண முடியாதபடி கானல் நீர் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது போனால் போகட்டும் என்று கருதி, (ஹதீஸ் முடிவதற்குமுன்) நான் அங்கிருந்து எழுந்து செல்லாமல் இருந்திருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.57 அத்தியாயம் :
حدثنا عبدان، عن ابي حمزة، عن الاعمش، عن جامع بن شداد، عن صفوان بن محرز، عن عمران بن حصين، قال اني عند النبي صلى الله عليه وسلم اذ جاءه قوم من بني تميم فقال " اقبلوا البشرى يا بني تميم ". قالوا بشرتنا فاعطنا. فدخل ناس من اهل اليمن فقال " اقبلوا البشرى يا اهل اليمن اذ لم يقبلها بنو تميم ". قالوا قبلنا. جيناك لنتفقه في الدين ولنسالك عن اول هذا الامر ما كان. قال " كان الله ولم يكن شىء قبله، وكان عرشه على الماء، ثم خلق السموات والارض، وكتب في الذكر كل شىء ". ثم اتاني رجل فقال يا عمران ادرك ناقتك فقد ذهبت فانطلقت اطلبها، فاذا السراب ينقطع دونها، وايم الله لوددت انها قد ذهبت ولم اقم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7418
- Book Index
- 46
Grades
- -
