ஹதீஸ்கள்
#7415
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: வேதக்காரர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அபுல் காசிமே! (மறுமையில்) அல்லாஹ் வானங்களை ஒரு விரலின் மீதும் பூமிகளை ஒரு விரலின் மீதும் மரத்தையும் ஈரமண்ணையும் ஒரு விரலின் மீதும், (இதர) படைப்புகளை ஒரு விரலின் மீதும் (நிறுத்தி) வைத்துக்கொண்டு, ‘நானே அரசன்; நானே அரசன்’ எனக் கூறுவான்” என்று சொன்னார். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்துவிட்டு, “அவர்கள் அல்லாஹ்வை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி மதிக்கவில்லை” எனும் (யூதர்களைப் பற்றிய 6:91 ஆவது) வசனத்தை ஓதிக்காட்டி னார்கள்.52 அத்தியாயம் :
حدثنا عمر بن حفص بن غياث، حدثنا ابي، حدثنا الاعمش، سمعت ابراهيم، قال سمعت علقمة، يقول قال عبد الله جاء رجل الى النبي صلى الله عليه وسلم من اهل الكتاب فقال يا ابا القاسم ان الله يمسك السموات على اصبع، والارضين على اصبع، والشجر والثرى على اصبع، والخلايق على اصبع، ثم يقول انا الملك انا الملك. فرايت النبي صلى الله عليه وسلم ضحك حتى بدت نواجذه ثم قرا {وما قدروا الله حق قدره}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7415
- Book Index
- 43
Grades
- -
