ஹதீஸ்கள்
#7414
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒரு யூதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே! அல்லாஹ் (மறுமை நாளில்) வானங்களை ஒரு விரலின் மீதும் பூமிகளை ஒரு விரலின் மீதும் மலைகளை ஒரு விரலின் மீதும் மரத்தை ஒரு விரலின் மீதும் (இதர) படைப்புகளை ஒரு விரலின் மீதும் நிறுத்திக்கொண்டு, ‘நானே அரசன்’ என்று கூறுவான்” என்று சொன்னார். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் வெளியே தெரியச் சிரித்துவிட்டு, “அவர்கள் அல்லாஹ்வை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி மதிக்கவில்லை” எனும் (யூதர்களைப் பற்றிய 6:91ஆவது) வசனத்தை ஓதிக்காட்டினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த யூதரின் சொல்லைக் கேட்டு வியப்படைந்து, அதை உறுதிப்படுத்தும் வகையில் சிரித்தார்கள்”.51 அத்தியாயம் :
حدثنا مسدد، سمع يحيى بن سعيد، عن سفيان، حدثني منصور، وسليمان، عن ابراهيم، عن عبيدة، عن عبد الله، ان يهوديا، جاء الى النبي صلى الله عليه وسلم فقال يا محمد ان الله يمسك السموات على اصبع والارضين على اصبع، والجبال على اصبع، والشجر على اصبع، والخلايق على اصبع، ثم يقول انا الملك. فضحك رسول الله صلى الله عليه وسلم حتى بدت نواجذه ثم قرا {وما قدروا الله حق قدره}. قال يحيى بن سعيد وزاد فيه فضيل بن عياض عن منصور عن ابراهيم عن عبيدة عن عبد الله فضحك رسول الله صلى الله عليه وسلم تعجبا وتصديقا له
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7414
- Book Index
- 42
Grades
- -
