ஹதீஸ்கள்
#7411
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் கரம் நிரம்பியுள்ளது; வாரிவழங்குவதால் அது வற்றிப்போய் விடுவதில்லை. இரவும் பகலும் (மழை மேகத்தைப்போல் அது தன் அருள் மழையைப்) பொழிந்துகொண்டேயிருக்கிறது. வானங்களையும் பூமியையும் அவன் படைத்தது முதல் அவன் வழங்கியவை அவனது கரத்திலுள்ள (செல்வத்)தை வற்றச் செய்துவிடவில்லை என்பதைப் பார்த்தீர்களா?. (வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு முன்னர்) அவனுடைய அரியணை (அர்ஷ்), நீரின் மீது இருந்தது. அவனது இன்னொரு கரத்தில் தராசு உள்ளது. அவனே (அதைத்) தாழ்த்துகின்றான்; அவனே உயர்த்துகின்றான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.49 அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، حدثنا ابو الزناد، عن الاعرج، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " يد الله ملاى لا يغيضها نفقة، سحاء الليل والنهار وقال ارايتم ما انفق منذ خلق السموات والارض، فانه لم يغض ما في يده وقال عرشه على الماء وبيده الاخرى الميزان يخفض ويرفع
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7411
- Book Index
- 40
Grades
- -
