ஹதீஸ்கள்
#7347
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னிடமும் தம் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்களிடமும் ஒரு(நாள்) இரவு நேரத்தில் வந்தார்கள். எங்களிடம், “நீங்கள் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் உயிர்களெல்லாம் அல்லாஹ்வின் கரத்தில்தானே இருக்கின் றன! அவன் எங்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நாடினால் எங்களை எழுப்பி விடுவான்” என்று சொன்னேன். நான் இப்படிச் சொன்னபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் சென்றுவிட்டார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபடி தமது தொடையில் தட்டிக்கொண்டே “மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கின்றான்” என்று சொல்óக் கொண்டிருந்ததை நான் கேட்டேன்.76 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகின் றேன்: (இங்கு ‘இரவில் வந்தார்கள்’ என்பதைக் குறிக்க ‘தர(க்)க’ எனும் வினைச்சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது.) இரவில் வரும் எதுவாயினும் அதற்கு ‘தாரிக்’ என்று சொல்லப்படும். நட்சத்திரத்திற்கும் ‘தாரிக்’ என்று சொல்வதுண்டு. ‘ஸாகிப்’ என்பது ‘பிரகாசிக்கக்கூடியது’ என்று பொருள்படும். ‘உஸ்குப்லி’ (உன் நெருப்பைப் பிரகாசிக்கச் செய்) என்று தீ மூட்டுபவனிடம் சொல்லப்படும். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، ح حدثني محمد بن سلام، اخبرنا عتاب بن بشير، عن اسحاق، عن الزهري، اخبرني علي بن حسين، ان حسين بن علي رضى الله عنهما اخبره ان علي بن ابي طالب قال ان رسول الله صلى الله عليه وسلم طرقه وفاطمة عليها السلام بنت رسول الله صلى الله عليه وسلم فقال لهم " الا تصلون ". فقال علي فقلت يا رسول الله انما انفسنا بيد الله، فاذا شاء ان يبعثنا بعثنا، فانصرف رسول الله صلى الله عليه وسلم حين قال له ذلك ولم يرجع اليه شييا، ثم سمعه وهو مدبر يضرب فخذه وهو يقول {وكان الانسان اكثر شىء جدلا}. قال ابو عبد الله يقال ما اتاك ليلا فهو طارق. ويقال الطارق النجم، والثاقب المضيء، يقال اثقب نارك للموقد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7347
- Book Index
- 75
Grades
- -
