ஹதீஸ்கள்
#7346
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் கடைசி ரக்அத்தில் தமது தலையை ருகூஉவிலிருந்து உயர்த்தி, “அல்லாஹும்ம ரப்பனா வ லக்கல் ஹம்து” (இறைவா! எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்) என்று சொல்லிவிட்டுப் பிறகு, “இறைவா! இன்னாரையும் இன்னாரையும் உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அப்போது வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ், “அவர்களை அல்லாஹ் மன்னிக்கும்வரை, அல்லது அவர்கள் அநீதியாளர்களாக இருப்பதால் அவனே அவர்களை வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே!) உமக்கு எந்த உரிமையும் இல்லை” எனும் (3: 128ஆவது) வசனத்தை அருளினான்.74 அத்தியாயம் :
حدثنا احمد بن محمد، اخبرنا عبد الله، اخبرنا معمر، عن الزهري، عن سالم، عن ابن عمر، انه سمع النبي صلى الله عليه وسلم يقول في صلاة الفجر رفع راسه من الركوع قال " اللهم ربنا ولك الحمد في الاخيرة ". ثم قال " اللهم العن فلانا وفلانا ". فانزل الله عز وجل {ليس لك من الامر شىء او يتوب عليهم او يعذبهم فانهم ظالمون}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7346
- Book Index
- 74
Grades
- -
