ஹதீஸ்கள்
#7344
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நஜ்த்வாசிகளுக்கு ‘கர்ன்’ எனுமிடத்தையும், ஷாம்வாசி களுக்கு ‘—ýஹ்ஃபா’வையும், மதீனாவாசி களுக்கு ‘துல்ஹுலைஃபா’வையும் இஹ்ராம் கட்டும் எல்லையாக நிர்ணயித் தார்கள். இதை நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன். மேலும், “நபி (ஸல்) அவர்கள், ‘யலம்லம்’ எனுமிடம் யமன்வாசிகளுக்கு (இஹ்ராம் கட்டுவதற் குரிய) இடமாகும்” என்று கூறியதாக எனக்குத் தகவல் கிடைத்தது. (இந்த ஹதீஸை அறிவிக்கையில்) இராக் நாட்டைப் பற்றியும் பேசப்பட்டது. அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், அந்நாளில் இராக்(வாசிகளிடையே முஸ்óம்கள்) இருக்கவில்லை” என்று கூறினார்கள்.72 அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، حدثنا سفيان، عن عبد الله بن دينار، عن ابن عمر، وقت النبي صلى الله عليه وسلم قرنا لاهل نجد، والجحفة لاهل الشام، وذا الحليفة لاهل المدينة. قال سمعت هذا من النبي صلى الله عليه وسلم وبلغني ان النبي صلى الله عليه وسلم قال " ولاهل اليمن يلملم ". وذكر العراق فقال لم يكن عراق يوميذ
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7344
- Book Index
- 72
Grades
- -
