ஹதீஸ்கள்
#7342
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் மதீனா சென்றிருந்தேன். அங்கு அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அவர்கள் என்னிடம், “வீட்டிற்குப் போகலாம் (வாருங்கள்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருந்திய ஒரு பாத்திரத்தில் உங்களுக்கு நான் அருந்தக் கொடுப்பேன்; மேலும், நபி (ஸல்) அவர்கள் தொழுத பள்ளிவாசலில் நீங்கள் தொழலாம்” என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுடன் சென்றேன். அவர்கள் எனக்கு (அரைத்த) மாவு பானத்தை அருந்தக் கொடுத்தார்கள்; பேரீச்சம் பழத்தை உண்ணக் கொடுத்தார்கள். அவர்களது பள்ளிவாசலில் தொழுதேன்.70 அத்தியாயம் :
حدثني ابو كريب، حدثنا ابو اسامة، حدثنا بريد، عن ابي بردة، قال قدمت المدينة فلقيني عبد الله بن سلام فقال لي انطلق الى المنزل فاسقيك في قدح شرب فيه رسول الله صلى الله عليه وسلم، وتصلي في مسجد صلى فيه النبي صلى الله عليه وسلم. فانطلقت معه، فسقاني سويقا، واطعمني تمرا، وصليت في مسجده
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7342
- Book Index
- 70
Grades
- -
