ஹதீஸ்கள்
#7336
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அப்போது அவற்றில் மெலியவைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகள் (பந்தயத்தில்) அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றின் பந்தயத் தொலைவு ‘ஹஃப்யா’ எனுமிடத்திலிருந்து ‘ஸனிய்யத்துல் வதாஉ’ மலைக்குன்றுவரையாக இருந்தது.மெலியவைக்கப்படாத குதிரைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றின் பந்தயத் தொலைவு ‘ஸனிய்யத்துல் வதா’ மலைக் குன்றிலிருந்து ‘பனூ ஸுரைக்’ குலத்தாரின் பள்ளிவாசல்வரையாக இருந்தது. மேலும், நானும் (குதிரைகளுடன்) போட்டியில் கலந்துகொண்டவர்களில் ஒருவனாயிருந்தேன்.65 அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا جويرية، عن نافع، عن عبد الله، قال سابق النبي صلى الله عليه وسلم بين الخيل، فارسلت التي ضمرت منها وامدها الى الحفياء الى ثنية الوداع، والتي لم تضمر امدها ثنية الوداع الى مسجد بني زريق، وان عبد الله كان فيمن سابق. حدثنا قتيبة عن ليث عن نافع عن ابن عمر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7336
- Book Index
- 65
Grades
- -
