ஹதீஸ்கள்
#7325
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “நீங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டதுண்டா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ஆம் (கலந்துகொண்டிருக்கிறேன்). நபி (ஸல்) அவர்களுடன் (சொந்தம் காரணமாக) எனக்கு நெருக்கம் இல்லாதிருந்திருப்பின் சிறுவனாக இருந்த நான் நபியவர்களுடன் (பெருநாள் தொழுகையில்) கலந்துகொண்டிருக்க முடியாது. நபி (ஸல்) அவர்கள் (பெருநாளன்று வீட்டில் இருந்து புறப்பட்டு) கஸீர் பின் அஸ்ஸல்த் உடைய வீட்டருகே உள்ள அடையாளமிடப்பட்ட இடத்திற்கு வந்து தொழுவித்தார்கள். பிறகு உரையாற்றினார்கள். பாங்கு சொல்லவுமில்லை; இகாமத் சொல்லவுமில்லை. பிறகு (உரையில்) தர்மம் செய்யும்படி உத்தரவிட்டார்கள். உடனே பெண்கள் தம் காதுகள் மற்றும் கழுத்துகளின் பக்கம் தம் கைகளைக் கொண்டுசென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட, அவர்கள் அப்பெண்களிடம் சென்று (அவர்களின் காதணிகளையும் கழுத்தணி களையும் சேகரித்துக்கொண்டு) நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிவந்தார்கள்.56 அத்தியாயம் :
حدثنا محمد بن كثير، اخبرنا سفيان، عن عبد الرحمن بن عابس، قال سيل ابن عباس اشهدت العيد مع النبي صلى الله عليه وسلم قال نعم ولولا منزلتي منه ما شهدته من الصغر، فاتى العلم الذي عند دار كثير بن الصلت فصلى ثم خطب، ولم يذكر اذانا ولا اقامة، ثم امر بالصدقة فجعل النساء يشرن الى اذانهن وحلوقهن، فامر بلالا فاتاهن، ثم رجع الى النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7325
- Book Index
- 55
Grades
- -
