ஹதீஸ்கள்
#7322
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
ஜாபிர் பின் அப்தில்லாஹ் அஸ்ஸலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்பதாக விசுவாசப் பிரமாணம் செய்தார். பின்னர் அவருக்கு மதீனாவில் காய்ச்சல் ஏற்பட்டது. ஆகவே, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை விடுவித்துவிடுங்கள்” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஏற்க) மறுத்துவிட்டார்கள். பிறகு மீண்டும் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எனது விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை விடுவித்து விடுங்கள்” என்று சொன்னார். மீண்டும் நபி (ஸல்) அவர்கள் மறுத்துவிட்டார்கள். பிறகு அவர் மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எனது விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை விடுவித்துவிடுங்கள்” என்று சொன்னார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் (ஏற்க) மறுத்துவிட்டார்கள். ஆகவே, அந்தக் கிராமவாசி (மதீனாவிலிருந்து) கிளம்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மதீனா கொல்லனின் உலை போன்றது; தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிட்டு நல்லவர்களை அது தூய்மைப்படுத்துகிறது” என்று சொன்னார்கள்.54 அத்தியாயம் :
حدثنا اسماعيل، حدثني مالك، عن محمد بن المنكدر، عن جابر بن عبد الله السلمي، ان اعرابيا، بايع رسول الله صلى الله عليه وسلم على الاسلام، فاصاب الاعرابي وعك بالمدينة، فجاء الاعرابي الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله اقلني بيعتي. فابى رسول الله صلى الله عليه وسلم ثم جاءه فقال اقلني بيعتي. فابى ثم جاءه فقال اقلني بيعتي. فابى فخرج الاعرابي فقال رسول الله صلى الله عليه وسلم " انما المدينة كالكير، تنفي خبثها، وينصع طيبها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7322
- Book Index
- 52
Grades
- -
