ஹதீஸ்கள்
#7321
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநியாயமாகக் கொல்லப்படும் எந்த (மனித) உயிராயினும் அ(தைக் கொலை செய்த பாவத்)தில் ஆதம் (அலை) அவர்களுடைய முதல் மகனுக்கும் நிச்சயமாக ஒரு பங்கு இருந்தே தீரும். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அறிவிப்பாளர் ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், ‘அதன் கொலையி(ன் பாவத்தி)லிருந்து’ என்று சிலவேளை கூறுவார்கள். ஏனெனில், அவர் (ஆதமின் முதல் மகனான காபீல்)தான் மனித சமுதாயத்திலேயே முதன்முதலாகக் கொலை செய்து முன்மாதிரியை ஏற்படுத்தியவர்.52 அத்தியாயம் :
حدثنا الحميدي، حدثنا سفيان، حدثنا الاعمش، عن عبد الله بن مرة، عن مسروق، عن عبد الله، قال قال النبي صلى الله عليه وسلم " ليس من نفس تقتل ظلما الا كان على ابن ادم الاول كفل منها وربما قال سفيان من دمها لانه اول من سن القتل اولا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7321
- Book Index
- 51
Grades
- -
