ஹதீஸ்கள்
#7320
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: “உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறித்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால்கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக்கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறித்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)?” என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வேறு யாரை?” என்று (திருப்பிக்) கேட்டார்கள்.50 அத்தியாயம் :
حدثنا محمد بن عبد العزيز، حدثنا ابو عمر الصنعاني من اليمن عن زيد بن اسلم، عن عطاء بن يسار، عن ابي سعيد الخدري، عن النبي صلى الله عليه وسلم قال " لتتبعن سنن من كان قبلكم شبرا شبرا وذراعا بذراع، حتى لو دخلوا جحر ضب تبعتموهم ". قلنا يا رسول الله اليهود والنصارى قال " فمن
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7320
- Book Index
- 50
Grades
- -
