ஹதீஸ்கள்
#7314
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, “(வெள்ளை நிறத்தவனான எனக்கு) என் மனைவி கறுப்பான மகனைப் பெற்றெடுத்தாள்; அவனை நான் (என் மனத்தில்) ஏற்க மறுத்துவிட்டேன்” என்று சொன்னார். அதற்கு அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன்னிடம் ஒட்டகங்கள் உள்ளனவா?” என்று கேட்டார்கள். அந்தக் கிராமவாசி, “ஆம்” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள் “அவற்றின் நிறம் என்ன?” என்று கேட்டார்கள். அவர், “சிவப்பு” என்று சொன்னார். “அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்களும் உள்ளனவா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர், “(ஆம்) அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்கள் இருக்கவே செய்கின்றன” என்று பதிலளித்தார். “(தாயிடம் இல்லாத) அந்த (சாம்பல்) நிறம் அவற்றுக்கு மட்டும் எவ்வாறு வந்ததென நீ கருதுகிறாய்?” என்று கேட்டார்கள். அந்தக் கிராமவாசி, “ஆண் ஒட்டகத்தின் பரம்பரை காரணமாக வந்திருக்கலாம், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “(உன்னுடைய) இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தைக் கொண்டிருக்கக்கூடும்” என்று கூறி, மகன் தன்னுடையவன் அல்லன் என்று மறுக்க அந்தக் கிராமவாசியை நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை.46 அத்தியாயம் :
حدثنا اصبغ بن الفرج، حدثني ابن وهب، عن يونس، عن ابن شهاب، عن ابي سلمة بن عبد الرحمن، عن ابي هريرة، ان اعرابيا، اتى رسول الله صلى الله عليه وسلم فقال ان امراتي ولدت غلاما اسود، واني انكرته. فقال له رسول الله صلى الله عليه وسلم " هل لك من ابل ". قال نعم. قال " فما الوانها ". قال حمر. قال " هل فيها من اورق ". قال ان فيها لورقا. قال " فانى ترى ذلك جاءها ". قال يا رسول الله عرق نزعها. قال " ولعل هذا عرق نزعه ". ولم يرخص له في الانتفاء منه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7314
- Book Index
- 45
Grades
- -
