ஹதீஸ்கள்
#7310
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் ஒரு பெண்மணி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (பெண்கள்) உங்கள் உரை களை(க் கேட்க முடியாதவாறு) ஆண்களே தட்டிச்சென்றுவிடுகின்றனர். ஆகவே, நாங்கள் தங்களிடம் வந்து, அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயித்துவிடுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்றுகூடுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே (அந்த நாளில் அந்த இடத்தில்) பெண்கள் ஒன்றுதிரண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்களிடம் சென்று, அல்லாஹ் தமக்குக் கற்றுக்கொடுத்தவற்றிலிருந்து அவர்களுக்குப் போதித்தார்கள். பிறகு, “உங்களில் எந்தப் பெண் தனக்கு (மரணம் வருவதற்கு) முன்பாக, தன் குழந்தைகளில் மூன்றுபேரை இழந்துவிடுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறிவிடுவார்கள்” என்று சொன்னார்கள். அப்போது அப்பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலுமா?” என்று கேட்டார். இதை அந்தப் பெண் இரண்டு முறை திரும்பத் திரும்பக் கேட்க, “ஆம்; இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலும்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் மும்முறை பதிலளித்தார்கள்.41 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7310
- Book Index
- 41
Grades
- -