ஹதீஸ்கள்
#7308
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூவாயில் (ரஹ்) அவர்களிடம், “நீங்கள் ஸிஃப்பீன் போரில் கலந்து கொண்டீர்களா?” என்று கேட்டேன். அவர்கள், “ஆம் (கலந்துகொண்டேன்)” என்று கூறிவிட்டு, “நான் சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றேன் என (பின்வருமாறு) அறிவித்தார்கள்: சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: மக்களே! (இந்தப் போரில் கலந்துகொள்ளாததற்காக என் மீது குற்றம்சாட்டாதீர்கள். மாறாக, கலந்து கொள்ள வேண்டும் என்று) உங்கள் மார்க்க விஷயத்தில் நீங்கள் எடுத்துள்ள முடிவையே குறைகாணுங்கள். அபூஜந்தல் (அபயம் தேடிவந்த) நாளில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கட்டளையை ஏற்க மறுப்பதற்கு என்னால் முடிந்திருந்தால் ஏற்க மறுத்திருப்பேன். (அன்று) எங்கள் தோள்களில் நாங்கள் எங்கள் வாட்களை (முடக்கி) வைத்துக் கொண்டது எங்களுக்குச் சிரமம் தரக்கூடிய விஷயமான போருக்கு அஞ்சியல்ல. நாங்கள் அறிந்த எளிய விஷயமான சமாதானத்தை அடைய, (முடக்கப்பட்ட) அந்த வாட்களே வழி வகுத்தன. ஆனால், இது (ஸிஃப்பீன் சண்டை) வேறு விஷயம். (முஸ்லிம்களுக்கிடையே மூண்டுவிட்ட இந்தப் போரில் ஈடுபடுவது அழிவைத்தான் தரும்).38 அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஸிஃப்பீன் போரில் நான் கலந்துகொண்டேன். ஸிஃப்பீன் போர் ஒரு கெட்ட நிகழ்ச்சி. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبدان، اخبرنا ابو حمزة، سمعت الاعمش، قال سالت ابا وايل هل شهدت صفين قال نعم. فسمعت سهل بن حنيف، يقول ح وحدثنا موسى بن اسماعيل، حدثنا ابو عوانة، عن الاعمش، عن ابي وايل، قال قال سهل بن حنيف يا ايها الناس اتهموا رايكم على دينكم، لقد رايتني يوم ابي جندل ولو استطيع ان ارد امر رسول الله صلى الله عليه وسلم لرددته، وما وضعنا سيوفنا على عواتقنا الى امر يفظعنا الا اسهلن بنا الى امر نعرفه غير هذا الامر. قال وقال ابو وايل شهدت صفين وبيست صفون
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7308
- Book Index
- 39
Grades
- -
