ஹதீஸ்கள்
#7307
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் (நாங்கள் இருந்த இடம் வழியாக) எங்களைக் கடந்து ஹஜ் செய்யச் சென்றார்கள். அப்போது அவர்கள் சொல்லக் கேட்டேன்: நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உங்களுக்குக் கல்வியை வழங்கியபின் அதை ஒரேயடி யாகப் பறித்துக்கொள்ளமாட்டான். மாறாக, கல்விமான்களை அவர்களது கல்வியுடன் கைப்பற்றிக்கொள்வதன் மூலம் அவர்களி டமிருந்து அதை (சன்னஞ்சன்னமாக)ப் பறித்துக்கொள்வான். பின்னர், அறிவீனர் களே எஞ்சியிருப்பார்கள். அவர்களிடம் மார்க்கத் தீர்ப்புக் கோரப்படும். அவர்களும் தமது சொந்தக் கருத்துப்படி தீர்ப்பளித்து (மக்களை) வழிகெடுப்பார் கள்; தாமும் வழிகெட்டுப்போவார்கள்” என்று கூறக் கேட்டேன். பிறகு நான் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அறிவித்தேன். அதன் பிறகு (ஓர் ஆண்டிலும்) அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் ஹஜ் செய்தார்கள். (அப்போது) ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம், “என் சகோதரியின் புதல்வரே! அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்களிடம் சென்று, (முன்பு) அவரிடமிருந்து (கேட்டு) நீ அறிவித்த ஹதீஸை எனக்காக அவரிடம் மீண்டும் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் அவர்களிடம் சென்று கேட்டேன். அவர்கள் முன்பு எனக்கு அறிவித்ததைப் போன்றே இப்போதும் எனக்கு அறிவித்தார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். அவர்கள் வியப்படைந்து “அல்லாஹ்வின் மீதாணையாக! அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்கள் நன்றாகவே நினைவில் வைத்திருக்கிறார்” என்று சொன்னார்கள்.37 அத்தியாயம் :
حدثنا سعيد بن تليد، حدثني ابن وهب، حدثني عبد الرحمن بن شريح، وغيره، عن ابي الاسود، عن عروة، قال حج علينا عبد الله بن عمرو فسمعته يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول " ان الله لا ينزع العلم بعد ان اعطاهموه انتزاعا، ولكن ينتزعه منهم مع قبض العلماء بعلمهم، فيبقى ناس جهال يستفتون فيفتون برايهم، فيضلون ويضلون ". فحدثت عايشة زوج النبي صلى الله عليه وسلم ثم ان عبد الله بن عمرو حج بعد فقالت يا ابن اختي انطلق الى عبد الله فاستثبت لي منه الذي حدثتني عنه. فجيته فسالته فحدثني به كنحو ما حدثني، فاتيت عايشة فاخبرتها فعجبت فقالت والله لقد حفظ عبد الله بن عمرو
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7307
- Book Index
- 38
Grades
- -
