ஹதீஸ்கள்
#7306
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
ஆஸிம் பின் சுலைமான் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவைப் புனித நகரமாக அறிவித்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்; இன்ன இடத்திலிருந்து இன்ன இடம்வரை (மதீனா புனிதமானது என்று நபியவர்கள் அறிவித்தார்கள். மேலும், சொன்னார்கள்:) அதன் மரம் (எதுவும்) வெட்டப்படக் கூடாது. அதில் யார் புதிதாக (மார்க்கத்தில் இல்லாத செயல்) ஒன்றை உருவாக்குகின்றானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் உண்டாகட்டும்” என்று கூறினார்கள் எனப் பதிலளித்தார்கள்.35 அனஸ் (ரலி) அவர்கள் வழியாக வரும் மற்றோர் அறிவிப்பில், “அல்லது புதியவற்றைப் புகுத்துபவனுக்குப் புகலிடம் அளிக்கின்றவன்மீது” என்று வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا عبد الواحد، حدثنا عاصم، قال قلت لانس احرم رسول الله صلى الله عليه وسلم المدينة. قال نعم ما بين كذا الى كذا، لا يقطع شجرها، من احدث فيها حدثا فعليه لعنة الله والملايكة والناس اجمعين. قال عاصم فاخبرني موسى بن انس انه قال او اوى محدثا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7306
- Book Index
- 37
Grades
- -
