ஹதீஸ்கள்
#7303
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) நோய்வாய்ப் பட்டிருந்தபோது, “மக்களுக்குத் தொழு விக்குமாறு அபூபக்ரிடம் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். நான், “நீங்கள் (தொழுகைக்காக) நிற்கும் இடத்தில் (என் தந்தை) அபூபக்ர் நிற்பார்களானால், (மனம் நெகிழ்ந்து) அழுது, அவர்கள் ஓதுவது மக்களுக்குக் கேட்காமல் போய்விடும்; ஆகவே, உமர் (ரலி) அவர்களிடம் கூறுங்கள்; அவர் தொழுவிக்கட்டும்” என்று சொன்னேன். ஆனால் நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ரிடம் சொல்லுங்கள்; மக்களுக்கு அவர் தொழுவிக்கட்டும்” என்று கூறினார்கள். நான் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் “உங்களது இடத்தில் அபூபக்ர் அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து) அழுது, அவர்கள் ஓதுவது மக்களுக்குக் கேட்காமல் போய்விடும். ஆகவே, மக்களுக்குத் தொழுவிக்குமாறு உமர் (ரலி) அவர்களுக்கு உத்தரவிடுங்கள்’ என்று சொல்” என்றேன். ஹஃப்ஸாவும் அவ்வாறே செய்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள்தான் யூசுஃப் (அலை) அவர்களுடைய தோழிகள் (போன்றவர்கள்). ஆகவே, மக்களுக்குத் தொழுவிக்குமாறு அபூபக்ரிடமே சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். அப்போது ஹஃப்ஸா (ரலி) அவர்கள் என்னிடம், “உன்னால் நான் நன்மை எதையும் கண்டதில்லை” என்று கூறினார்.31 அத்தியாயம் :
حدثنا اسماعيل، حدثني مالك، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة ام المومنين، ان رسول الله صلى الله عليه وسلم قال في مرضه " مروا ابا بكر يصلي بالناس ". قالت عايشة قلت ان ابا بكر اذا قام في مقامك لم يسمع الناس من البكاء، فمر عمر فليصل. فقال " مروا ابا بكر فليصل بالناس ". فقالت عايشة فقلت لحفصة قولي ان ابا بكر اذا قام في مقامك لم يسمع الناس من البكاء، فمر عمر فليصل بالناس، ففعلت حفصة. فقال رسول الله صلى الله عليه وسلم " انكن لانتن صواحب يوسف، مروا ابا بكر فليصل للناس ". قالت حفصة لعايشة ما كنت لاصيب منك خيرا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7303
- Book Index
- 34
Grades
- -
