ஹதீஸ்கள்
#7302
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நல்லவர்களான அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக்கொள்ள இருந்தார்கள். (ஹிஜ்ரீ ஒன்பதாம் ஆண்டு) பனூ தமீம் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்குமாறு கோரியவர்களாக) வந்தனர். அப்போது (அபூபக்ர், உமர் ஆகிய) அந்த இருவரில் ஒருவர், பனூ முஜாஷிஉ குலத்தாரான அக்ரஉ பின் ஹாபிஸ் அத்தமீமீ அல்ஹன்ழலீ (ரலி) அவர்களை (தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார்; மற்றொருவர், இன்னொருவரை (தலைவராக்கும்படி) சைகை செய்தார். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “எனக்கு மாறு செய்வதையே நீங்கள் விரும்புகிறீர்கள்” என்று சொல்ல, அதற்கு உமர் (ரலி) அவர்கள், “தங்களுக்கு மாறு செய்வது என் நோக்கமன்று” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. அப்போதுதான், “இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரலை நபியின் குரலுக்குமேல் உயர்த்தாதீர்கள்” எனும் (49:2ஆவது) வசனம் முழுமையாக அருளப்பெற்றது. இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இந்த வசனம் அருளப்பெற்ற பின் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் எதைப் பேசினாலும் இரகசியம் பேசுபவரைப் போன்று (மெதுவாகத்)தான் பேசுவார்கள்; (அவர் என்ன கூறினார் என்பதை) நபி (ஸல்) அவர்கள் அவரிடம் (திரும்ப) விசாரித்தே தெரிந்துகொள்வார்கள். இந்த ஹதீஸை தம் பாட்டனார் அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்து கேட்டு அறிவிப்பதாக இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் குறிப்பிடவில்லை.30 அத்தியாயம் :
حدثنا محمد بن مقاتل، اخبرنا وكيع، عن نافع بن عمر، عن ابن ابي مليكة، قال كاد الخيران ان يهلكا ابو بكر، وعمر، لما قدم على النبي صلى الله عليه وسلم وفد بني تميم، اشار احدهما بالاقرع بن حابس الحنظلي اخي بني مجاشع، واشار الاخر بغيره، فقال ابو بكر لعمر انما اردت خلافي. فقال عمر ما اردت خلافك. فارتفعت اصواتهما عند النبي صلى الله عليه وسلم فنزلت {يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم} الى قوله {عظيم}. قال ابن ابي مليكة قال ابن الزبير فكان عمر بعد ولم يذكر ذلك عن ابيه يعني ابا بكر اذا حدث النبي صلى الله عليه وسلم بحديث حدثه كاخي السرار، لم يسمعه حتى يستفهمه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7302
- Book Index
- 33
Grades
- -
