ஹதீஸ்கள்
#7301
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்தார்கள். (மற்றவர்களுக்கும்) அதைச் செய்ய அனுமதியளித்தார்கள். அப்போது சிலர் அதைச் செய்வதிóருந்து விலகிக்கொண்டனர். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள் (உரையாற்ற எழுந்து) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, “சிலருக்கு என்னாயிற்று? நான் செய்கின்ற ஒன்றைச் செய்வதிóருந்து விலகிக்கொள்கிறார்களாமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களைவிட அல்லாஹ்வை மிகவும் அறிந்தவன்; அவனை மிகவும் அஞ்சி நடப்பவன் ஆவேன்” என்று கூறினார்கள்.29 அத்தியாயம் :
حدثنا عمر بن حفص، حدثنا ابي، حدثنا الاعمش، حدثنا مسلم، عن مسروق، قال قالت عايشة رضي الله عنها صنع النبي صلى الله عليه وسلم شييا ترخص وتنزه عنه قوم، فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فحمد الله ثم قال " ما بال اقوام يتنزهون عن الشىء اصنعه، فوالله اني اعلمهم بالله، واشدهم له خشية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7301
- Book Index
- 32
Grades
- -
