ஹதீஸ்கள்
#7299
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “தொடர்நோன்பு நோற்காதீர்கள்” என்று கூறினார்கள். மக்கள், “நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களைப் போன்றவன் அல்லன். எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் கொடுக்கின்ற நிலையில் நான் உள்ளேன்” என்று பதிலளித்தார்கள். இருந்தும், மக்கள் தொடர்நோன்பைக் கைவிடவில்லை. ஆகவே, அவர்களுடன் சேர்ந்து நபி (ஸல்) அவர்கள் ‘இரண்டு நாட்கள்’ அல்லது ‘இரண்டு இரவுகள்’ தொடர்நோன்பு நோற்றார்கள். பிறகு மக்கள் பிறையைப் பார்த்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘பிறை இன்னும் தள்ளிப் போயிருந்தால், உங்களை இன்னும் (தொடர்நோன்பை) அதிகமாக்கச் செய்திருப்பேன்” என்று மக்களைக் கண்டிப்பதைப் போன்று சொன்னார்கள்.27 அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا هشام، اخبرنا معمر، عن الزهري، عن ابي سلمة، عن ابي هريرة، قال قال النبي صلى الله عليه وسلم " لا تواصلوا ". قالوا انك تواصل. قال " اني لست مثلكم، اني ابيت يطعمني ربي ويسقيني ". فلم ينتهوا عن الوصال قال فواصل بهم النبي صلى الله عليه وسلم يومين او ليلتين، ثم راوا الهلال فقال النبي صلى الله عليه وسلم " لو تاخر الهلال لزدتكم ". كالمنكل لهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7299
- Book Index
- 30
Grades
- -
