ஹதீஸ்கள்
#7298
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பொன் மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து)கொண்டார்கள். மக்களும் பொன் மோதிரங்களைச் செய்து (அணிந்து)கொண்டார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள், “நான் பொன் மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து)கொண்டேன். (அப்படித்தானே!)” என்று கூறிவிட்டு, அதை(க் கழற்றி) எறிந்துவிட்டார்கள். மேலும், “நான் அதை ஒருபோதும் அணியமாட்டேன்” என்றும் சொன்னார்கள். உடனே, மக்கள் அனைவரும் தங்களின் (பொன்) மோதிரங்களை(க் கழற்றி) எறிந்து விட்டார்கள்.25 அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا سفيان، عن عبد الله بن دينار، عن ابن عمر رضى الله عنهما قال اتخذ النبي صلى الله عليه وسلم خاتما من ذهب فاتخذ الناس خواتيم من ذهب، فقال النبي صلى الله عليه وسلم " اني اتخذت خاتما من ذهب ". فنبذه وقال " اني لن البسه ابدا " فنبذ الناس خواتيمهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7298
- Book Index
- 29
Grades
- -
