ஹதீஸ்கள்
#7297
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மதீனாவில் நபி (ஸல்) அவர் களுடன் ஒரு வேளாண் பூமியில் இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் பேரீச்சமட்டை ஒன்றின் மீது (கையை) ஊன்றியபடி நின்றிருந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் யூதர்கள் சிலரைக் கடந்துசென்றார்கள். அவர்களில் ஒருவர், “இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்” என்று சொன்னார். மற்றொருவர், “நீங்கள் அவரிடம் கேட்காதீர்கள்; ஏனெனில் நீங்கள் விரும்பாத பதிலை அவர் உங்களுக்குத் சொல்லிவிடக் கூடாது” என்று சொன்னார். பின்னர் அவர்கள் (அனைவரும் சேர்ந்து) நபி (ஸல்) அவர்களிடம் எழுந்து சென்று, “அபுல் காசிமே! உயிரைப் பற்றி எங்களுக்குத் தெரிவியுங்கள்!” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் எழுந்து நின்று கூர்ந்து பார்த்தார்கள். உடனே நான், அவர்களுக்கு ‘வஹீ’ (வேதஅறிவிப்பு) அறிவிக்கப்படுகின்றது என்று புரிந்துகொண்டேன். ஆகவே, ‘வஹீ’ வருவதற்கு வசதியாக நான் அவர்களைவிட்டு சற்றுப் பின்தள்ளி நின்றேன். பிறகு, நபி (ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) “நபியே! உயிரைப் பற்றி உம்மிடம் அவர்கள் வினவுகின்றார்கள். உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது என்று கூறுவீராக!” எனும் (17:85ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.24 அத்தியாயம் :
حدثنا محمد بن عبيد بن ميمون، حدثنا عيسى بن يونس، عن الاعمش، عن ابراهيم، عن علقمة، عن ابن مسعود رضى الله عنه قال كنت مع النبي صلى الله عليه وسلم في حرث بالمدينة، وهو يتوكا على عسيب، فمر بنفر من اليهود فقال بعضهم سلوه عن الروح. وقال بعضهم لا تسالوه لا يسمعكم ما تكرهون. فقاموا اليه فقالوا يا ابا القاسم حدثنا عن الروح. فقام ساعة ينظر فعرفت انه يوحى اليه، فتاخرت عنه حتى صعد الوحى، ثم قال {ويسالونك عن الروح قل الروح من امر ربي}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7297
- Book Index
- 28
Grades
- -
