ஹதீஸ்கள்
#7290
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ரமளான் மாதத்தில்) பள்ளிவாசல் பாயினால் அறை அமைத்துக்கொண்டு அதில் சில இரவுகள் (இரவுத் தொழுகை) தொழுதார்கள். அதனால் மக்கள் அவர்கள் பின்னே திரண்டு (தொழத் தொடங்கி)விட்டார்கள். ஒருநாள் நபி (ஸல்) அவர்களது குரலை மக்களால் கேட்க முடியவில்லை. ஆகவே, நபி அவர்கள் (வீட்டினுள்) உறங்கிவிட்டார்கள் போலும் என்று மக்கள் நினைத்துக்கொண்டனர். எனவே, அவர்களில் சிலர் நபி (ஸல்) அவர்கள் தங்களிடம் வருவதற்காக கனைக்கலானார்கள். ஆகவே (மறுநாள்) நபி (ஸல்) அவர்கள், “(ஒவ்வொரு நாளும் என்னைப் பின்தொடர்ந்து இரவுத் தொழுகையைத் தொழுகின்ற) உங்கள் செயலை நான் கண்டுவந்தேன். உங்கள்மீது (ரமளானின் இரவுத் தொழுகையான) அது கடமை யாக்கப்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சும் அளவிற்கு உங்களது அச்செயல் தொடர்ந்துகொண்டே இருந்தது. நீங்கள் தொழுத (இரவுத்) தொழுகை உங்கள்மீது கடமையாக ஆக்கப்பட்டுவிட்டால் உங்களால் அதை நிறைவேற்ற முடியாது. ஆகவே, மக்களே! நீங்கள் (இரவுத் தொழுகையை) உங்கள் வீடுகளிலேயே தொழுங்கள். ஏனெனில், ஒரு மனிதனின் தொழுகைகளில் சிறந்தது அவன் தனது வீட்டில் தொழுவதுதான்; கடமையான தொழுகையைத் தவிர” என்று சொன்னார்கள்.18 அத்தியாயம் :
حدثنا اسحاق، اخبرنا عفان، حدثنا وهيب، حدثنا موسى بن عقبة، سمعت ابا النضر، يحدث عن بسر بن سعيد، عن زيد بن ثابت، ان النبي صلى الله عليه وسلم اتخذ حجرة في المسجد من حصير، فصلى رسول الله صلى الله عليه وسلم فيها ليالي، حتى اجتمع اليه ناس، ثم فقدوا صوته ليلة فظنوا انه قد نام، فجعل بعضهم يتنحنح ليخرج اليهم فقال " ما زال بكم الذي رايت من صنيعكم، حتى خشيت ان يكتب عليكم، ولو كتب عليكم ما قمتم به فصلوا ايها الناس في بيوتكم، فان افضل صلاة المرء في بيته، الا الصلاة المكتوبة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7290
- Book Index
- 21
Grades
- -
