ஹதீஸ்கள்
#7286
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா பின் பத்ர் (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) வந்து தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு பின் கைஸ் பின் ஹிஸ்ன் (ரலி) அவர்களிடம் தங்கினார்கள். உமர் (ரலி) அவர்கள் தம் அருகே (தமக்கு நெருக்கமாக) வைத்துக்கொள்பவர்களில் ஒருவராக ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்கள் இருந்தார்கள். முதியவர்களோ இளைஞர்களோ யாராயினும் (குர் ஆனையும் ஹதீஸையும்) கற்றறிந்தவர் களே உமர் (ரலி) அவர்களின் அவை யோராகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர். ஆகவே, உயைனா (ரலி) அவர்கள் தம் சகோதரருடைய புதல்வரிடம், “என் சகோதரர் மகனே! இந்தத் தலைவர் (உமர்-ரலி) இடம் உனக்கு செல்வாக்கு உள்ளதா? அப்படி இருந்தால் நான் அவரிடம் செல்ல எனக்காக நீ அனுமதி பெற்றுத்தா” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “உமர் (ரலி) அவர்களிடம் செல்ல உங்களுக்காக நான் அனுமதி கோருகிறேன்” என்று சொன்னார். அவ்வாறே உயைனாவுக்காக ஹுர்ரு பின் கைஸ் அனுமதி கேட்டார்கள். உயைனா (ரலி) அவர்கள் உள்ளே சென்றவுடன், “கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை; எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லை” என்று சொன்னார். உடனே உமர் (ரலி) அவர்கள் கோபமடைந்து அவரை அடிக்க முனைந்தார்கள். அப்போது ஹுர்ரு அவர்கள், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு ‘(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக. நன்மை புரியுமாறு ஏவுவீராக. அறிவீனர்களைப் புறக்கணிப்பீராக’ (7:199) என்று கூறியுள்ளான். இவர் அறிவீனர்களில் ஒருவராவார்” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு அவர்கள் இந்த வசனத்தை உமர் (ரலி) அவர்களுக்கு ஓதிக் காட்டியபோது உமர் அதை மீறவில்லை. (பொதுவாகவே) உமர் இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படுபவர்களாய் இருந்தார்கள்.15 அத்தியாயம் :
حدثني اسماعيل، حدثني ابن وهب، عن يونس، عن ابن شهاب، حدثني عبيد الله بن عبد الله بن عتبة، ان عبد الله بن عباس رضى الله عنهما قال قدم عيينة بن حصن بن حذيفة بن بدر فنزل على ابن اخيه الحر بن قيس بن حصن، وكان من النفر الذين يدنيهم عمر، وكان القراء اصحاب مجلس عمر ومشاورته كهولا كانوا او شبانا فقال عيينة لابن اخيه يا ابن اخي هل لك وجه عند هذا الامير فتستاذن لي عليه قال ساستاذن لك عليه. قال ابن عباس فاستاذن لعيينة فلما دخل قال يا ابن الخطاب والله ما تعطينا الجزل، وما تحكم بيننا بالعدل. فغضب عمر حتى هم بان يقع به فقال الحر يا امير المومنين ان الله تعالى قال لنبيه صلى الله عليه وسلم {خذ العفو وامر بالعرف واعرض عن الجاهلين} وان هذا من الجاهلين. فوالله ما جاوزها عمر حين تلاها عليه، وكان وقافا عند كتاب الله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7286
- Book Index
- 17
Grades
- -
