ஹதீஸ்கள்
#7285
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து அவர்களுக்குப்பின் அபூபக்ர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக (ஆட்சித் தலைவராக) ஆக்கப்பட்டபோது அரபியரில் சிலர் (ஸகாத் வழங்க மறுத்ததன் மூலம்) இறைமறுப்பாளர்களாய் மாறினர். (அவர்கள்மீது போர் தொடுக்கப்போவதாக அபூபக்ர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.) அப்போது உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “இந்த மக்களுடன் நீங்கள் எவ்வாறு போரிட முடியும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சொல்லும்வரை மக்களுடன் போர் புரியும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சொன்னவர் தகுந்த காரணம் இருந்தால் தவிர, தனது செல்வத்திற்கும் உயிருக்கும் என்னிடம் பாதுகாப்பு பெறுவார். அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது என்று கூறியுள்ளார்களே!” எனக் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகை யையும் ஸகாத்தையும் வேறுபடுத்திப் பார்ப்பவர்களுடன் நான் போர்புரிந்தே தீருவேன். ஏனெனில், ஸகாத் என்பது பொருளாதாரக் கடமையாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செலுத்திவந்த ஒரு கயிற்றை இவர்கள் இப்போது என்னிடம் செலுத்த மறுத்தாலும் அதை மறுத்ததற்காக அவர்களுடன் போர்புரிவேன்” என்று சொன்னார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (ஸகாத் வழங்க மறுத்தவர்கள்மீது) போர் தொடுக்கும் (முடிவை எடுக்கும்)படி அபூபக்ர் (ரலி) அவர்களின் இதயத்தை அல்லாஹ் விரிவாக்கிவிட்டான் என்பதைத் தவிர வேறெதையும் அப்போது நான் காணவில்லை. அதுவே சரி(யான முடிவு) என்பதை நான் அறிந்துகொண்டேன்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சில அறிவிப்புகளில், (கயிறு என்பதற்குப் பதிலாக) ‘ஒட்டகக் குட்டி’ என வந்துள்ளது. அதுவே சரியானதாகும்.14 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7285
- Book Index
- 16
Grades
- -