ஹதீஸ்கள்
#7281
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது அவர்களிடம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் “இவர் உறங்கிக்கொண்டிருக்கிறார்” என்றார். அதற்கு மற்றொருவர் “கண்தான் உறங்குகிறது; உள்ளம் விழித்திருக்கிறது” என்று கூறினார். பின்னர் அவர்கள் “உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள்” என்று பேசிக்கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் “இவர் உறங்குகிறாரே!” என்றார். மற்றொருவர் “கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது” என்றார். பின்னர் அவர்கள், “இவரது நிலை ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பி னார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்; விருந்துண் டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை; விருந்துண்ணவு மில்லை” என்று கூறினார்கள். பின்னர் அவர்கள், “இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்துகொள்ளட்டும்” என்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் “இவர் உறங்குகிறாரே!” என்று சொல்ல, மற்றொருவர் “கண்தான் தூங்குகிறது; உள்ளம் விழித்திருக்கிறது” என்றார். அதைத் தொடர்ந்து “அந்த வீடுதான் சொர்க்கம்; அழைப்பாளி முஹம்மத் (ஸல்) அவர்கள்; முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்துவிட்டார்; முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்துவிட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்களை (நல்லவர்- கெட்டவர் என)ப் பகுத்துக் காட்டிவிட்டார்கள்” என்று விளக்கமளித் தார்கள். மற்றோர் அறிவிப்பாளர்தொடரில் ஜாபிர் (ரலி) அவர்கள், “(ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வெளியேறிவந்து (இந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தார்கள்)” என்று கூறியுள்ளார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن عبادة، اخبرنا يزيد، حدثنا سليم بن حيان واثنى عليه حدثنا سعيد بن ميناء، حدثنا او، سمعت جابر بن عبد الله، يقول جاءت ملايكة الى النبي صلى الله عليه وسلم وهو نايم فقال بعضهم انه نايم. وقال بعضهم ان العين نايمة والقلب يقظان. فقالوا ان لصاحبكم هذا مثلا فاضربوا له مثلا. فقال بعضهم انه نايم. وقال بعضهم ان العين نايمة والقلب يقظان. فقالوا مثله كمثل رجل بنى دارا، وجعل فيها مادبة وبعث داعيا، فمن اجاب الداعي دخل الدار واكل من المادبة، ومن لم يجب الداعي لم يدخل الدار ولم ياكل من المادبة. فقالوا اولوها له يفقهها فقال بعضهم انه نايم. وقال بعضهم ان العين نايمة والقلب يقظان. فقالوا فالدار الجنة، والداعي محمد صلى الله عليه وسلم فمن اطاع محمدا صلى الله عليه وسلم فقد اطاع الله، ومن عصى محمدا صلى الله عليه وسلم فقد عصى الله، ومحمد صلى الله عليه وسلم فرق بين الناس. تابعه قتيبة عن ليث، عن خالد، عن سعيد بن ابي هلال، عن جابر، خرج علينا النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7281
- Book Index
- 13
Grades
- -
