ஹதீஸ்கள்
#7275
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இந்த (புனித கஅபா) பள்ளிவாசலில் நான் ஷைபா பின் உஸ்மான் (ரஹ்) அவர்களின் அருகில் அமர்ந்தேன். அவர்கள் சொன்னார்கள்: உமர் (ரலி) அவர்கள் என்னுடன் நீங்கள் அமர்ந்திருக்கும் இதே இடத்தில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர்கள், “நான் தங்கம் மற்றும் வெள்ளி எதையும் மக்களிடையே பங்கிடாமல் கஅபாவில் விட்டுவைக்கலாகாது என விரும்பினேன்” என்று கூறினார்கள். நான், “உங்களால் அப்படிச் செய்ய முடியாது” என்று கூறினேன். அவர்கள், “ஏன் முடியாது?” என்று கேட்டார்கள். நான், “உங்கள் தோழர்கள் (நபி (ஸல்), அபூபக்ர் (ரலி) ஆகிய) இருவரும் அப்படிச் செய்யவில்லையே” என்று சொன்னேன். உமர் (ரலி) அவர்கள், “அவ்விருவரும் பின்பற்றப்பட வேண்டியவர்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا عمرو بن عباس، حدثنا عبد الرحمن، حدثنا سفيان، عن واصل، عن ابي وايل، قال جلست الى شيبة في هذا المسجد قال جلس الى عمر في مجلسك هذا فقال هممت ان لا ادع فيها صفراء ولا بيضاء الا قسمتها بين المسلمين. قلت ما انت بفاعل. قال لم. قلت لم يفعله صاحباك قال هما المران يقتدى بهما
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7275
- Book Index
- 8
Grades
- -
