ஹதீஸ்கள்
#7269
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்கள் இறந்த) மறுநாள் முஸ்லிம்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (அவர்களை கலீஃபாவாக ஏற்று) விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்து கொடுத்தபோது உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது அமர்ந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு முன்பாக ஓரிறை உறுதி மொழியைக் கூறினார்கள். பிறகு “இறைவனைப் போற்றிப் புகழ்ந்தபின் (கூறுகின்றேன்:) உங்களிடம் (உலகில்) உள்ள (செல்வத்)தைவிட (மறுமையில்) தன்னிடம் இருப்பதையே தன் தூதருக்கு (வழங்கிட) அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். அல்லாஹ் எந்த வேதத்தைக் கொண்டு உங்கள் தூதரை வழிநடத்தினானோ அதை நீங்கள் பற்றிக்கொள்ளுங்கள்; நல்வழி பெறுவீர்கள். ஏனெனில், அல்லாஹ் தன் தூதரை நல்வழியில் செலுத்தியதெல்லாம் அந்த வேதத்தின் வாயிலாகத்தான்” என்று சொன்னார்கள்.3 அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، اخبرني انس بن مالك، انه سمع عمر الغد، حين بايع المسلمون ابا بكر، واستوى على منبر رسول الله صلى الله عليه وسلم تشهد قبل ابي بكر فقال اما بعد فاختار الله لرسوله صلى الله عليه وسلم الذي عنده على الذي عندكم، وهذا الكتاب الذي هدى الله به رسولكم فخذوا به تهتدوا وانما هدى الله به رسوله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7269
- Book Index
- 2
Grades
- -
