ஹதீஸ்கள்
#7268
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: யூதர்களில் ஒருவர் உமர் (ரலி) அவர்களிடம், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! ‘இன்று உங்களது மார்க் கத்தை உங்களுக்காக நான் முழுமை யாக்கிவிட்டேன். எனது அருட்கொடை யையும் உங்கள்மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக் காக இஸ்லாத்தை மார்க்கமாக அங்கீகரித்துவிட்டேன்’ எனும் இந்த (5:3ஆவது) இறைவசனம் எங்களுக்கு அருளப்பட்டிருந்தால் நாங்கள் (வசனம் அருளப்பட்ட) அந்த நாளை பண்டிகை நாளாக ஆக்கிக்கொண்டிருப்போம்” என்று சொன்னார். அப்போது உமர் (ரலி) அவர்கள், “இந்த வசனம் எந்த நாளில் இறங்கியது என்பதை நான் நன்கறிவேன். இது அரஃபா (துல்ஹிஜ்ஜா ஒன்பதாம்) நாள் வெள்ளிக் கிழமையன்று அருளப்பெற்றது” என்று சொன்னார்கள்.2 அத்தியாயம் :
حدثنا الحميدي، حدثنا سفيان، عن مسعر، وغيره، عن قيس بن مسلم، عن طارق بن شهاب، قال قال رجل من اليهود لعمر يا امير المومنين لو ان علينا نزلت هذه الاية { اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا} لاتخذنا ذلك اليوم عيدا. فقال عمر اني لاعلم اى يوم نزلت هذه الاية، نزلت يوم عرفة في يوم جمعة. سمع سفيان من مسعر ومسعر قيسا وقيس طارقا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7268
- Book Index
- 1
Grades
- -
