ஹதீஸ்கள்
#7264
ஸஹீஹ் அல்-புகாரீ - Accepting Information Given by a Truthful Person
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாரசீக மன்னர் குஸ்ரூ எனும்) கிஸ்ரா வுக்குத் தாம் எழுதிய கடிதத்தை (அப்துல்லாஹ் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கொடுத்து) பஹ்ரைன் அதிபரிடம் சேர்த்திடுமாறும், பஹ்ரைன் அதிபர் அதை கிஸ்ராவிடம் ஒப்படைப்பார் என்றும் கட்டளையிட்டு அனுப்பினார்கள். கிஸ்ரா அதைப் படித்தபோது (கோபம் கொண்டு) அதைத் துண்டு துண்டாகக் கிழித்துவிட்டார். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘கிஸ்ரா’ ஆட்சியாளர்கள் முற்றாகச் சிதறடிக்கப்பட வேண்டுமென அவர்களுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்” என சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாக எண்ணுகிறேன்.22 அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثني الليث، عن يونس، عن ابن شهاب، انه قال اخبرني عبيد الله بن عبد الله بن عتبة، ان عبد الله بن عباس، اخبره ان رسول الله صلى الله عليه وسلم بعث بكتابه الى كسرى، فامره ان يدفعه الى عظيم البحرين، يدفعه عظيم البحرين الى كسرى، فلما قراه كسرى مزقه، فحسبت ان ابن المسيب قال فدعا عليهم رسول الله صلى الله عليه وسلم ان يمزقوا كل ممزق
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Accepting Information Given by a Truthful Person
- Hadith Index
- #7264
- Book Index
- 18
Grades
- -
