ஹதீஸ்கள்
#7260
ஸஹீஹ் அல்-புகாரீ - Accepting Information Given by a Truthful Person
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தபோது கிராமவாசிகளில் ஒருவர் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் சட்டப்படி எனக்குத் தீர்ப்பளியுங்கள்” என்று சொன்னார். உடனே அவருடைய எதிரி (பிரதிவாதி) எழுந்து, “இவர் சொல்வது உண்மையே; அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் சட்டப்படியே அவருக்குத் தீர்ப்பளியுங்கள். எனக்கு (என் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்ல) அனுமதியளியுங்கள்” என்று சொன்னார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “சரி சொல்” என்றார்கள். (இதற்கிடையில் அந்தக் கிராமவாசி,) “என் மகன் இவரிடம் கூலிக்கு வேலை செய்துவந்தான். இவருடைய மனைவியுடன் அவன் விபசாரம் புரிந்துவிட்டான். அப்போது மக்கள் என் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு என என்னிடம் தெரிவித்தனர். ஆகவே, நான் அதற்குப் பதிலாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணை யும் ஈடாக வழங்கினேன். பிறகு அறிஞர் களிடம் கேட்டேன். அவர்கள், இவருடைய மனைவியைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்றும், என் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டு நாடு கடத்தலும்தான் (தண்டனை) என்றும் தெரிவித்தார்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் உங்கள் இருவரிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளிக்கி றேன்: “அடிமைப் பெண்ணையும் ஆடுகளையும் திருப்பிக் கொடுத்து விடுங்கள். உம் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டு நாடுகடத்தும் தண்டனையும் வழங்கப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு, அஸ்லம் குலத்து மனிதர் ஒருவரை நோக்கி “உனைஸே! நீங்கள் இவருடைய மனைவியிடம் செல்லுங்கள். அவள் (விபசாரம் புரிந்தது உண்மைதான் என) ஒப்புக்கொண்டால் அவளைக் கல்லெறிந்து கொன்றுவிடுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே உனைஸ் (ரலி) அவர்கள் அவளிடம் சென்றார்கள். அவள் (குற்றத்தை) ஒப்புக்கொள்ளவே அவளைக் கல்லெறிந்து கொன்றார்கள்.17 அத்தியாயம் :
وحدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، اخبرني عبيد الله بن عبد الله بن عتبة بن مسعود، ان ابا هريرة، قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم اذ قام رجل من الاعراب فقال يا رسول الله اقض لي بكتاب الله. فقام خصمه فقال صدق يا رسول الله، اقض له بكتاب الله، واذن لي. فقال له النبي صلى الله عليه وسلم " قل ". فقال ان ابني كان عسيفا على هذا والعسيف الاجير فزنى بامراته فاخبروني ان على ابني الرجم، فافتديت منه بماية من الغنم ووليدة، ثم سالت اهل العلم فاخبروني ان على امراته الرجم، وانما على ابني جلد ماية وتغريب عام. فقال " والذي نفسي بيده لاقضين بينكما بكتاب الله، اما الوليدة والغنم فردوها، واما ابنك فعليه جلد ماية وتغريب عام، واما انت يا انيس لرجل من اسلم فاغد على امراة هذا، فان اعترفت فارجمها ". فغدا عليها انيس فاعترفت فرجمها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Accepting Information Given by a Truthful Person
- Hadith Index
- #7260
- Book Index
- 14
Grades
- -
