ஹதீஸ்கள்
#7257
ஸஹீஹ் அல்-புகாரீ - Accepting Information Given by a Truthful Person
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு படைப் பிரிவை அனுப்பி அவர்களுக்கு (அன்சாரிகளில்) ஒருவரைத் தளபதியாக்கினார்கள். அவர் (ஒரு கட்டத்தில் படைவீரர்கள்மீது கோபம்கொண்டு) நெருப்பை மூட்டி, “இதில் நுழையுங்கள்” என்று சொன்னார். அவர்கள் அதில் நுழைய முனைந்தார்கள். (படையிலிருந்த) மற்றவர்கள், “நாம் இந்த (நரக) நெருப்பிலிருந்து தப்பிக்கத்தானே (இஸ்லாத்திற்கு) வந்தோம்” என்று கூறினர். ஆகவே, இதை அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நெருப்பில் புக முனைந்தோர் குறித்து, “அவர்கள் அதில் புகுந்திருந்தால் மறுமை நாள்வரை அதிலேயே இருந்திருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். மற்றவர்களிடம், “அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் கீழ்ப் படிதல் கிடையாது; கீழ்ப்படிதல் என்ப தெல்லாம் நன்மையில்தான்” என்று சொன்னார்கள்.15 அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن زبيد، عن سعد بن عبيدة، عن ابي عبد الرحمن، عن علي رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم بعث جيشا وامر عليهم رجلا، فاوقد نارا وقال ادخلوها. فارادوا ان يدخلوها، وقال اخرون انما فررنا منها، فذكروا للنبي صلى الله عليه وسلم فقال للذين ارادوا ان يدخلوها " لو دخلوها لم يزالوا فيها الى يوم القيامة ". وقال للاخرين " لا طاعة في معصية، انما الطاعة في المعروف
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Accepting Information Given by a Truthful Person
- Hadith Index
- #7257
- Book Index
- 12
Grades
- -
